அதிரடி ஆக்ஷன் காட்சிகள், விறுவிறுப்பான திரைக்கதையுள்ள திரைப்படங்கள் உங்களுக்கு பிடிக்குமானால், நீங்கள் ஜான் விக் என்ற திரைப்படத்தை கண்டிப்பாக பார்த்திருப்பீர்கள்.
அந்த அளவிற்கு, வன்முறை காட்சிகள் நிறைந்த திரைப்படம் தான் இது. இதன் முதல் பாகம் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான நிலையில், படம் பெரிய வெற்றி பெற்றதால், அதற்கடுத்தடுத்த பாகங்கள் தொடர்ந்து வெளியானது.
இந்நிலையில், இந்த படத்தின் 4-ஆம் பாகம், தற்போது வெளியாகி, அதன் ரசிகர்களை முழுவதுமாக திருப்திபடுத்தியுள்ளது. இதன்காரணமாக, உலகம் முழுவதும் இப்படம் பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்நிலையில், இந்த படம் உலகம் முழுவதும், 13 ஆயிரத்து 700 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இந்தியாவில் மட்டும், 20 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது.