ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை பிரியா மாலிக் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.20 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி ஜோர்டனில் நடைபெற்றுவரும் நிலையில்,இதில் 76 கிலோ எடைப்பிரிவின் இறுதிப் போட்டியில், இந்திய வீராங்கனை பிரியா மாலிக்கும், ஜெர்மனி வீராங்கனை லாரா செலிவ் குஹனும் பலப்பரீட்சை நடத்தினர்.
கடுமையாக நடைபெற்ற போட்டியின் போது பிரியா மாலிக்கிற்கு இடது கண்ணில் காயம் ஏற்பட்டது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் திறம்பட செயல்பட்ட பிரியா மாலிக் 5-0 என்ற புள்ளி கணக்கில் ஜெர்மனி வீராங்கனையை வீழ்த்தினார்.
அதன்படி ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையை பிரியா மாலிக் தட்டிச்சென்றுள்ளார். கடந்த ஆண்டு ஆன்டிம் பங்கல் தங்கப்பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
.