அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் மருத்துவமனையில் விஷம் குடித்ததாக கூறி கர்ப்பிணி பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த பிப்ரவரி 22ம் தேதி பெண் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தை வெறும் 350 கிராம் மட்டுமே இருந்துள்ளது. மேலும் குழந்தை உள்ளங்கை அளவுக்கு சிறிதாக இருந்துள்ளது. இதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
குழந்தை பிறந்த போது நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் தாயும் குழந்தையும் ஆபத்தான நிலையில் இருந்தனர். இதையடுத்து குழந்தைக்கும், தாய்க்கும் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சை முடிந்த நிலையில் தற்போது குழந்தையின் எடை 3.40 கிலோவாக அதிகரித்துள்ளது.
தொடர் சிகிச்சையால் குழந்தை ஆரோக்கியமாக மாறியுள்ளதை கண்டு மருத்துவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.