வாரிசு படப்பிடிப்பில் நடக்கும் கொடுமை? – விஜய்க்கு தெரியுமா? தெரியாதா?

தளபதி விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. பெரும் பொருட்செலவில் தயாராகி வரும் இந்த திரைப்படம், வரும் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பில் கொடுமையான சம்பவம் ஒன்று நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சினிமா படப்பிடிப்பு நடக்கும்போது, அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உணவு வழங்குவது வழக்கம்.

அவ்வாறு வழங்கும் உணவில், பாரபட்சம் காட்டப்படுகிறதாம். உச்ச நடிகர்களுக்கு நல்ல உணவும், லைட்மேன்கள் போன்ற கடைநிலை ஊழியர்களுக்கு மோசமான உணவும் வழங்கப்படுகிறதாம். இந்த தகவல் விஜயின் கவனத்திற்கு சென்றதா? இல்லையா? போன்ற கேள்விகளும், தற்போது எழுந்துள்ளது.