இந்திய சினிமாக்களில் பல நல்ல திரைப்படங்களை கொடுத்தது என்றால், அது கோலிவுட் தான். 70-களில் இருந்து தொடர்ந்து பல நல்ல படைப்புகளை வழங்கி வந்த தமிழ் சினிமா, 80-களின் காலகட்டத்தில், பாரதிராஜா, பாலசந்தர், பாலுமகேந்திர போன்றோரால், உலக சினிமா தரத்திற்கு உயர்ந்தது.
ஆனால், 90-களின் பிற்பகுதிகளில், கமர்ஷியல் சினிமா பக்கம் திரும்பிய கோலிவுட், நல்ல கதைகளுடன் வெளியாகி, ரசிகர்களை ஏமாற்றாமல் இருந்தது. ஒரு கட்டத்தில், தமிழ் சினிமாவில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு, மற்ற மொழியில் நல்ல மதிப்பு இருந்தது என்றே சொல்லலாம்.
நாட்கள் செல்ல செல்ல, கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல், வருடத்தில் சொற்ப அளவிலான நல்ல திரைப்படங்கள் மட்டுமே தமிழ் சினிமாவில் வந்துக் கொண்டிருக்கின்றன. இப்படியே சென்றுக் கொண்டிருந்தால், தமிழ் சினிமாவின் மார்கெட், பாதாளத்திற்கு சென்றுவிடும் என்று தான் சொல்ல வேண்டும்.
இதற்கு உதாரணமாக, இந்த வாரம் வெளியான சில திரைப்படங்களை சொல்லாலம். ருத்ரன், சொப்பண சுந்தரி, திருவின் குரல் என்று வரிசை கட்டி வெளியான இந்த படங்கள், ரசிகர்களிடம் இருந்து நெகட்டிவ் விமர்சனங்களையே பெற்று வருகிறது.
குறிப்பாக, பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கத்தில், லாரன்ஸ் நடிப்பில் வெளியான ருத்ரன் திரைப்படம், சூற மொக்கையாக உள்ளது என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா ஆகிய படங்களை தயாரித்த பைவ் ஸ்டார் கதிரேசனா, இதுமாதிரியான கதையை எழுதி இயக்கியுள்ளார் என்பது, ஆச்சரியமாக உள்ளது. சுதாரித்துக் கொள்ளுங்கள், தமிழ் இயக்குநர்களே.. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்..