நடப்பு ஐபிஎல் தொடரின் 57-வது லீக் போட்டி ஹைதராபாத் உப்பல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் ஆடிய லக்னோ அணியில் டி காக் (2), ஸ்டோய்னிஸ் (3) ஆகிய இருவரையும் புவனேஷ்வர் குமார் வெளியேற்றினார்.
பின்னர் ராகுல் 29 (33) ரன்களில் ஆட்டமிழக்க, க்ருணால் பாண்டியா 24 ரன்களில் அவுட் ஆனார். எனினும் ஆயுஷ் பதோனி அதிரடியாக 30 பந்தில் 55 ரன்களும், நிக்கோலஸ் பூரன் 26 பந்துகளில் 48 ரன்களும் விளாசினர்.
இதன்மூலம் லக்னோ அணி 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
அடுத்து சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா களமிறங்கினர். இருவரும் லக்னோ பந்துவீச்சை நாலாபுறமும் பறக்கவிட்டு, மைதானத்தில் வாணவேடிக்கை காட்டினர்.
ஹெட் 16 பந்துகளில் தனது அரைசதத்தினை பூர்த்தி செய்தார். அதன் பின்னரும் அவரது ஆட்டத்தில் வேகம் குறையவில்லை. அதேபோல் அதிரடி அரைசதம் விளாசிய அபிஷேக்கும் ருத்ர தாண்டவம் ஆடினார்.
இவர்களின் ஆட்டத்தினால் ஜெட் வேகத்தில் அணியின் ஸ்கோர் உயர்ந்து, 9.4 ஓவரில் 167 ரன்கள் எடுத்தது SRH இமாலய வெற்றி பெற்றது.