Connect with us

Raj News Tamil

தேர்வு எழுத முடியாத மாணவி…ஆசிரியர் உதவியோடு தேர்வு எழுதி அசத்தல்

தமிழகம்

தேர்வு எழுத முடியாத மாணவி…ஆசிரியர் உதவியோடு தேர்வு எழுதி அசத்தல்

ராமநாதபுரம் மாவட்டம் ராஜசிங்கமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் இன்று பார்வையிட்டார். ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று தொடங்கிய 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 160 மையங்களில் 14478 பேர் எழுதுகின்றனர்.

12 ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகளின் மேற்படிப்பை நிர்ணயிக்கும் பொதுத்தேர்வு இன்று தொடங்கி 25 ம் தேதிவரை நடைபெறுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 6698 மாணவர்களும் , 7500 மாணவிகளும், 280 தனித் தேர்வர்கள் என மொத்தம் 14478 பேர் 160 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.

இத் தேர்வு மையத்தில் செய்யப்பட்ட வசதிகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் , ராஜசிங்கமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பார்வையிட்டார். மேலும் இம் மையத்தில் தனது கைகளால் தேர்வு எழுத முடியாத மாணவி ஒருவர், ஆசிரியர் துணையுடன் தேர்வு எழுதியதை ஆட்சியர் பார்வையிட்டார்.

இத்தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடுவோரை கண்காணிக்க 60 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top