IMF என்று அழைக்கப்படும் சர்வதேச அமைப்பு, உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்து புதிய தகவல் ஒன்றை கணக்கிட்டுள்ளது.
அதன்மூலம், கடந்த ஆண்டை காட்டிலும், 2024-ஆம் ஆண்டில், பொருளாதார வளர்ச்சி குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. ஜப்பான் போன்ற நன்கு வளர்ச்சி அடைந்த நாட்டில் 0.9 சதவீத வீழ்ச்சியும், இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாட்டில் 6.8 சதவீத வீழ்ச்சியும் ஏற்பட்டிருப்பதாக, IMF கூறியுள்ளது.
ஆனால், அமெரிக்கா நாட்டை பொறுத்தவரை, கடந்த ஆண்டை காட்டிலும் 2.7 சதவீதம் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
அதாவது, வெளிநாட்டில் இருந்து வரும் நபர்களை, அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். அதன்மூலம், தொழிலாளர் வளம் அதிகரித்து, நாட்டின் பொருளாதாரம் உயர்கிறது என்று, பல்வேறு ஆய்வாளர்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் ஜனாதிபதி அதிரடி கருத்து ஒன்றை, நேற்று கூறி, பரபரப்பை கிளப்பியுள்ளார். அதாவது, அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியில், 2024-ஆம் ஆண்டு நடக்க உள்ள தேர்தலுக்கான பணம் திரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட ஜோ பைடன், சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியது பின்வருமாறு:-
“ஏன் சீனா மிகவும் மோசமான பொருளாதார சரிவை சந்தித்துள்ளது? ஏன் ஜப்பான்? ஏன் ரஷ்யா? ஏன் இந்தியா? ஏனென்றால், அவர்கள் அனைவரும் இனவெறி பிடித்தவர்கள். அவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து வரும் புலம் பெயர் தொழிலாளர்கள் வேண்டாம். புலம்பெயர்ந்து அமெரிக்காவுக்கு வருபவர்களால் தான், நாம் இன்னும் வலிமையாக இருக்கிறோம்” என்று தெரிவித்தார். இவரது இந்த பேச்சு, பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.