மஹாராஷ்ராவில் முதல்வராக இருந்தவர் உத்தவ் தாக்கரே. அண்மையில் இவரது கட்சியை சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், 41 எம்எல்ஏ-கள் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து இவர்மீது, நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்தி ஷிண்டே தலைமையில் ஆட்சி அமைத்தனர்.
இந்நிலையில் ஷிண்டே அணியை சேர்ந்த 41-எம்எல்ஏ-கள், 10 எம்பி-களுக்கு Y+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் முதல்வர், துணை முதல்வர், ஆளுநர் ஆகியோருக்கு Z+ பாதுகாப்பும், அன்னா ஹசாரேவுக்கு Z பாதுகாப்பும் வழங்கியுள்ளது. அதேநேரம் உத்தவ் தாக்கரே அணியினருக்கு பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.