இந்தியாவில் உள்ள முக்கியமான அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், உயிருக்கு ஆபத்து இருக்கும் வகையில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு, ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவது வழக்கம்.
இந்த வகையான பாதுகாப்பு பிரிவுகளில், CRPF வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என்று அதிகபட்சமாக 11 பேர் வரை, பாதுகாப்பு அளிப்பார்கள்.
இந்நிலையில், இந்த ‘Y’ பிரிவு பாதுகாப்பு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்-க்கு வழங்கி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், தமிழகத்திற்குள் மட்டுமே, அவருக்கு இந்த பாதுகாப்பு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.