பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் உருவான திரைப்படம் கே.ஜி.எப் 1 மற்றும் 2. இந்த இரண்டு திரைப்படங்களும், மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், பேன் இந்தியா நடிகராக யாஷ் மாறியிருக்கிறார்.
இந்நிலையில், தமிழ் தயாரிப்பாளர் ஒருவருடன், நடிகர் யாஷ் கூட்டணி வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, விஜயின் பிகில், லவ் டுடே, தனி ஒருவன் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்த ஏ.ஜி.எஸ் நிறுவனம் தான், யாஷ்-ஐ வைத்து, பேன் இந்தியா படத்தை இயக்க உள்ளது.