17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவரது தாயார், எடியூரப்பா மீது புகார் அளித்தார். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு சிஐடி-க்கு மாற்றப்பட்டது.
சிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி எடியூரப்பாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் எடியூரப்பா சிஐடி முன் ஆஜராகவில்லை.
இதனையடுத்து பெங்களூரு நீதிமன்றம் எடியூரப்பாவிற்கு எதிராக ஜாமினில் வரமுடியாத கைது வாரன்ட்-ஐ பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் பிடிவாரண்டுக்கு எதிராக எடியூரப்பா தரப்பு கர்நாடக உயர்நீதிமன்றத்தை நாடிய நிலையில், ஜூன் 17ம் தேதி வரை கைது செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.