Connect with us

Raj News Tamil

யோகிபாபு – கவுண்டமணி கூட்டணி! சினிமா ரசிகர்கள் ஆச்சரியம்!

சினிமா

யோகிபாபு – கவுண்டமணி கூட்டணி! சினிமா ரசிகர்கள் ஆச்சரியம்!

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் கவுண்டமணி. இவரது காமெடிக்காகவே, பல்வேறு திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளன.

ஆனால், உடல்நலம் பாதிக்கப்பட்டதால், சினிமாவில் இருந்து விலகிவிட்டார். தற்போது, மீண்டும் இவர் சினிமாவில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த படத்தில், யோகிபாபுவும் முன்னணி கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கிச்சா வயசு 16 என்ற படத்தை இயக்கிய சாய் ராஜகோபால் என்பவர் தான், இந்த படத்தையும் இயக்க உள்ளாராம்.

யோகிபாபுவும், கவுண்டமணியும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க உள்ள தகவல், சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

More in சினிமா

To Top