Connect with us

Raj News Tamil

சாதிய திமிரை காட்டிய கோவில் குருக்கள் – அசிங்கப்பட்ட யோகிபாபு..!

சினிமா

சாதிய திமிரை காட்டிய கோவில் குருக்கள் – அசிங்கப்பட்ட யோகிபாபு..!

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் யோகிபாபு. அதீத தெய்வ பற்று கொண்ட இவர் சமீபத்தில் கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு ரசிகர்கள் அனைவரும் யோகிபாபுக்கு கை கொடுத்து புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.

இந்நிலையில், யோகிபாபு அந்த கோவிலில் அவமானப்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதாவது, கோயில் குருக்கள் ஒருவருக்கு யோகிபாபு கை கொடுக்க முயன்ற போது, அதனை அவர் மறுத்துவிட்டு ஆசிர்வதிப்பது போல் கையை மட்டும் காட்டியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், முன்னாள் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் முதல் நடிகர் யோகிபாபு வரை இதே தீண்டாமை பிரச்சனைக்கு ஆளாகி உள்ளனர்.

எத்தனை பெரியார் வந்தாலும் உங்களை திருத்த முடியாது என்று சொல்வது உண்மைதானோ..?

More in சினிமா

To Top