மாட்டிக்கறி சாப்பிட்டு வாய் பேசுறியா? – அரசு பள்ளி ஆசிரியர்!

கோவையை சேர்ந்த முகமது உசைன் என்பவரின் மகள் அசோகபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்துவருகிறார். இந்த மாணவியை ஆசிரியர் ஒருவர் ‘மாட்டுக்கறி சாப்பிட்டு, வாய் பேசுகிறாயா?’ என்று மிரட்டி, கன்னத்தில் அறைந்திருக்கிறார். மற்றோர் ஆசிரியரும் நீ மாட்டுக்கறி சாப்பிடுவியா? அந்த திமிறுலதான் இப்படி நடந்துகொள்கிறாயா? என்று கேட்டுள்ளனர்.

இது குறித்து மாணவியின் தந்தை முகமது உசைன் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் தலைமை ஆசிரியரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாணவியையும் ஆசிரியர்கள் மாட்டுக்கறி குறித்து திட்டியுள்ளனர்.

இதனால் மாணவியின் தந்தை முதன்மைக் கல்வி அலுவலரிடம் மனு கொடுத்துள்ளார். இதையடுத்து இந்தப் பிரச்சனை துடியலூர் காவல் நிலையத்துக்குச் சென்றது. உதவி ஆணையர் கொடுத்த நம்பிக்கையில் மீண்டும் மாணவி பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது மாணவி அணிந்திருந்த பர்தா மூலம் அனைவரது காலணிகளையும் துடைக்கச் சொல்லியிருக்கின்றனர். இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் கூறியதோடு இனி பள்ளிக்கு செல்ல மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

எனவே முதல்வரிடம் புகார் அளித்த தந்தை முகமது உசைன், ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எங்கள் மகள் மீண்டும் பள்ளிக்குச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News