பிரேக்-அப் செய்த காதலி.. பழிவாங்கிய காதலன்.. தற்கொலை செய்த இளம்பெண்..

தெலங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில், இளம்பெண் ஒருவர், 3-ஆம் ஆண்டு படித்து வந்தார். இவரும், அதே கல்லூரியில் படித்து வந்த இன்னொரு மாணவரும், காதலித்து வந்தனர். ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சமீபத்தில் அந்த பெண் பிரேக்-அப் செய்தார்.

அந்த பிரிவை ஏற்றுக் கொள்ளாத காதலன், இளம்பெண்ணை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார். இருப்பினும், அந்த பெண் தனது முன்னாள் காதலன் உடன் பேச மறுத்ததால், தன்னிடம் இருந்த இளம்பெண்ணின் புகைப்படங்களை, தனது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார்.

இப்படியே, அந்த கல்லூரி மாணவர்கள் மத்தியில் புகைப்படம் வைரலானதையடுத்து, இளம்பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அவர், நேற்று முன்தினம் உறவினர் வீட்டிற்கு சென்றபோது, தற்கொலை செய்துகொண்டார்.

இது பெண்ணின் பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மகளின் தற்கொலைக்கான காரணம், அவரது முன்னாள் காதலன் என்பதை அறிந்த பெற்றோர், காவல்துறையில் புகார் அளித்தனர். அதன்பேரில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக உள்ள அந்த மாணவனை தேடி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News