சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் யாழினி. இவரும், அதே நிறுவனத்தில் பணிபுரியும் செல்சியா என்ற பெண்ணும், நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவத்தன்று, உறவினர்களை சந்திப்பதற்காக, ஊரப்பாக்கம் பகுதிக்கு சென்றுள்ளனர். அனைவரையும் சந்தித்து முடித்த பிறகு, வீட்டிற்கு செல்வதற்காக, ஊரப்பாக்கம் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கு, தண்டவாளத்தில் நடந்துச் சென்றபோது, பின்னே வந்த ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், செல்சியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், படுகாயம் அடைந்த யாழினியை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.