ஆண் வேடமிட்டு.., மாமியாருக்கு வலை விரித்த மருமகள்!

நெல்லை மாவட்டம் வடுகன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகவேல். இவருக்கு, சீதா ராம லட்சுமி என்ற மனைவியும், ராமசாமி என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில், ராமசாமிக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு அன்று, மகா லட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்திருக்கிறது.

திருமணம் ஆன தொடக்கத்தில், மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே, தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், விரக்தி அடைந்த ராமசாமி, தனிக்குடித்தனம் சென்றுள்ளார். இருப்பினும், ஓயாத மாமியார்-மருமகள் சண்டை, அவ்வப்போது நடந்துக் கொண்டே இருந்துள்ளது.

இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, மாமியார்-மருமகளுக்கு, மீண்டும் சண்டை நடந்துள்ளது. இந்த முறை கடுமையாக நடந்த சண்டை, வீதி வரை சென்றுள்ளது. இதனால், அவமானம் அடைந்ததாக கருதிய மருமகள் மகா லட்சுமி, தனது மாமியாரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

அதன்படி, கடந்த திங்கள் கிழமை அன்று, ஆண் வேடம் அணிந்த வீட்டிற்குள் வந்த மகா லட்சுமி, தனது மாமியாரை இரும்பு ராடாடல் அடித்து கொலை செய்துள்ளார். மேலும், அவரது கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு, நகைக்காக கொலை நடந்திருப்பதை போல், ஜோடித்துள்ளார்.

இதையடுத்து, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். ஆனால், இவ்வாறு மாஸ்டர் பிளான் செய்த மருமகள், வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவை கவனிக்கவில்லை. அதில், ஒரு பெண், ஆண் வேடம் அணிந்து, கொலை செய்திருப்பதை கண்டறிந்த காவல்துறையினர், அதனை குடும்ப உறுப்பினர்களிடம் காட்டியுள்ளனர். அதனை பார்த்த அவர்கள், இது மகா லட்சுமி தான் என்பதை உறுதி செய்துள்ளனர். இதையடுத்து, அந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.

RELATED ARTICLES

Recent News