கோவை மாவட்டம் ரத்தினபுரி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்த நிலையில், மாப்பிள்ளை தேடி வந்தனர். இறுதியில், மாலத்தீவில் செப் ஆக பணியாற்றி வந்த நபருடன் திருமணம் செய்து வைப்பதற்கு, சம்பந்தம் பேசப்பட்டது.
இந்நிலையில், அந்த இளம்பெண்ணும், செஃப்-ம், கடந்த நவம்பர் மாதம் அன்று, ஆனைக்கட்டி பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு இருவரும் ஒன்றாக இருந்தபோது, அந்த நபர், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதன் விளைவாக கர்ப்பம் அடைந்த அந்த பெண்ணிடம், “நான் உன்னை நிச்சயம் திருமணம் செய்து கொள்கிறேன்.. ஆனால், நீ அந்த கருவை கலைத்து விடு” என்று செஃப் கூறியுள்ளார்.
இதனை நம்பி, அந்த பெண்ணும் கருவை கலைத்துள்ளார். ஆனால், சில நாட்களுக்கு பிறகு, 5 லட்சம் ரூபாய் பணமும், 10 பவுன் நகையும் வரதட்சனையாக கொடுத்தால் தான் திருமணம் செய்துக் கொள்வேன் என்று கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண், காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறையினர், செஃப் மீதும், அவரது தாய் மற்றும் தந்தை மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது, இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.