பெரம்பலூர் மாவட்டம் கைகளத்தூர் பகுதியைச் சேர்ந்த அழகுவேல் என்பவரது மகள் அபர்ணா (21). இவர் நேற்று இரவு சுமார் 10.30 மணி அளவில் சைதாப்பேட்டை செல்வதற்காக செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் காத்திருந்தார். அப்போது 4 பேர் அவரை கடத்தி சென்று சாலவாக்கம் அருகே வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அபர்ணா செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.