ஜிம்மில் உடற்பயிற்சி செய்த இளைஞர் உயிரிழப்பு!

மீஞ்சூர் அருகே ஜிம்மில் உடற்பயிற்சி செய்த இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்தனார்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த வல்லூர் மின் நகரை சேர்ந்த வினோத்குமார் (35) திருமணமாகாதவர். இவர் வல்லூர் அனல் மின் நிலையத்தில் கடந்த 5 ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். மேலும் இவர் அண்மையில் விஜய் கட்சியில் சேர்ந்துள்ளார்.

வினோத்குமார் தினமும் காலையில் அத்திப்பட்டு பகுதியில் உள்ள ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வது வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல வினோத்குமார் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மீஞ்சூர் போலீசார் வினோத்குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜிம்மில் உடற்பயிற்சி செய்த இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News