Connect with us

Raj News Tamil

தவறான சிகிச்சையால் 3 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் இளைஞர்

தமிழகம்

தவறான சிகிச்சையால் 3 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் இளைஞர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கலைஞர் நகரில் வசித்து வருபவர் மனோகரன். இவருடைய மகன் சுமன் (27) மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஓசூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்.

அங்கு அவருக்கு திடீரென்று உடல் நிலை சரியில்லாமல் போனதும் அவர்கள் அதே கம்பெனி (பீனிக்ஸ்) மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.அங்கு சுமனுக்கு கூடுதலாக மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த இளைஞனின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக கோமா நிலையிலேயே இருக்கிறார்.

இதையடுத்து சுமன் வேலை பார்த்து வந்த கம்பெனி மீதும் மருத்துவமனை மீதும் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் தீர்ப்பில் 15 லட்சம் தருவதாக பெங்களூர் நுகர்வோர் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆனால் இளைஞரின் வயது 24 இதனை கருத்தில் கொண்டு 80 லட்சம் வேண்டும் என்று குடும்பத்தினர் கோரிக்கை வைக்கின்றனர். ஆனால் இது குறித்து கம்பெனியா கம்பெனி நிர்வாகமோ இன்று வரை இளைஞரை கண்டு கொள்ளவே இல்லை.

இதன் காரணமாக சுமனின் பெற்றோர் மற்றும் அவரின் தங்கை மிகுந்த வேதனையுடன் நமக்கு பேட்டியளித்தனர். இது போன்ற தனியார் மருத்துவமனையின் மருத்துவ சிகிச்சை அலட்சியத்தால் வேறு எவருக்கும் இது போன்ற பாதிப்புகள் வரக்கூடாது. பாதிக்கப்பட்ட இளைஞருக்கு போதிய நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள அவரது உறவினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்ணீர் மல்க கூறுகின்றனர்.

More in தமிழகம்

To Top