சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் “சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள்.
சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிக்க வேண்டும்” என அவர் பேசினார்.
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கு நாடு முழுக்க கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அவர் கூறியதாவது “100 ஆண்டுகளுக்கு முன் பெரியார் சொன்னதைத்தான் உதயநிதி சொல்லியிருக்கிறார். அதில் எந்தத் தவறும் இல்லை. உதயநிதியை இளம் பெரியார் என்று சொல்லலாம்” என அவர் கூறியுள்ளார்.