புதுச்சேரி அடுத்த ஆலங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் விந்தியா (22). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.
இதையடுத்து அவரை மூலகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், டெங்கு பாதிப்பு இருப்பதை உறுதி செய்தனர்.
இந்நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி விந்தியா பரிதாபமாக உயிரிழந்தார்.