“வீடியோ-வ Net-ல விட்ருவேன்” – சிகிச்சைக்கு சென்றபோது பழக்கம்.. இளம்பெண்ணை சீரழித்த மருத்துவர்..

சென்னை எண்ணூர் பகுதியை சேர்ந்தவர் 28 வயதான பட்டதாரி பெண். இவர், கடந்த 2019-ஆம் ஆண்டு அன்று, மருத்துவமனை ஒன்றிற்கு, சிகிச்சைக்கு சென்றுள்ளார். அப்போது, தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் ஒன்றாக பழகி வந்துள்ளனர்.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில், இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இவ்வாறு நெருக்கமாக இருந்த தருணங்களை, அந்த மருத்துவர் வீடியோவாகவும், புகைப்படங்களாகவும், எடுத்து வைத்துள்ளார்.

இந்நிலையில், சமீப காலங்களாக, அந்த மருத்துவர், இளம்பெண்ணிடம் பேசுவதை, தொடர்ந்து தவிர்த்து வந்துள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு, உறவை தொடர விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார். இதுமட்டுமின்றி, தன்னை தொடர்ந்து தொல்லை செய்தால், நெருக்கமாக இருந்த வீடியோவை, இணையத்தில் வெளியிடுவேன் என்றும் மிரட்டியிருக்கிறார்.

மருத்துவரின் உண்மையான சுயரூபத்தை அறிந்த பெண், காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில், பல்வேறு வழக்குகள் பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக உள்ள மருத்துவரை தேடி வருகின்றனர்.

இதற்கிடையே, 10 லட்சம் ரூபாய் பணத்தை செலவு செய்து, தன் மீதான விசாரணையை முடக்குவதற்கு, மருத்துவர் முயற்சி செய்ததாகவும், பெண் தரப்பினர் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

RELATED ARTICLES

Recent News