நைசாக பழகிய இளம்பெண்.. கோழி கறி குருமாவால் 100 சவரன் நகையை இழந்த மூதாட்டி.. நடந்தது என்ன?

கோவை மாவட்டம் ராமநாதபுரம் அருகே உள்ள கிருஷ்ணா காலணியை சேர்ந்தவர் ராஜேஷ்வரி. 60 வயதாகும் இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரிடம் நிறைய பணம் மற்றும் நகைகள் இருப்பதை அறிந்த வர்ஷினி என்ற பெண், அதனை திருடுவதற்கு திட்டம் தீட்டினார்.

இதனால், ராஜேஷ்வரி உடன் நல்ல பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட அவர், 4 வருடங்கள் வரை காத்திருந்தார். சரியான நேரம் வந்த நேரத்தில், வீட்டில் இருந்த அனைத்து நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்றுள்ளார். அதாவது, கடந்த மார்ச் 21-ஆம் தேதி அன்று, ராஜேஷ்வரியின் வீட்டில், வர்ஷினியும், அவரது 3 நண்பர்களும், உணவு அருந்தியுள்ளனர்.

அப்போது, வர்ஷினி கொண்டு வந்த கோழி கறி குருமாவை சாப்பிட்டு, ராஜேஷ்வரி மயக்கம் அடைந்துள்ளார். இதையடுத்து, வீட்டில் இருந்து 2.5 கோடி ரூபாய் ரொக்கப் பணத்தையும், 100 சவரன் தங்க நகைகளையும், எடுத்துக் கொண்டு, அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

மயக்கம் தெளிந்ததும், பணம் திருடுப்போனதை அறிந்த ராஜேஷ்வரி, காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர், வர்ஷினியின் நண்பர்கள் 3 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து, 33 லட்சம் ரூபாய் பணமும், 31 சவரன் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், தலைமறைவாக உள்ள வர்ஷினியிடம் தான், மற்ற நகைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அவரை பிடிக்கும் முயற்சியில், காவல்துறையினர் மும்மரம் காட்டி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News