பொள்ளாச்சியில் பேருந்தில் இருக்கைகாக பேருந்தை மறித்த இளம் பெண் செயலால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தினந்தோறும் கோவைக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் செல்கின்றனர்.
காலை வேலையில் கல்லூரி மாணவர்களும் பணிக்கு செல்வோர்களும் ஏராளமானோர் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக கூட்டமாக காத்திருந்தனர்.
அப்போது பேருந்து நிலையத்திற்கு கோவை செல்லும் தனியார் பேருந்து பயணிகளை ஏற்றுவதற்காக நிறுத்தப்பட்டது அப்போது சிலர் முண்டி அடுத்துக்கொண்டு இருக்கைக்காக தங்கள் கையில் இருக்கும் பை உள்ளிட்ட பொருட்களை பேருந்து இருக்கையின் மீது போட்டுள்ளனர்.
இதில் கோவை பகுதிக்கு வேலைக்கு செல்லும் இந்துஜா என்ற இளம் பெண் இதேபோல இருக்கைக்காக தன் பையை பேருந்து இருக்கைமீது போட்டுள்ளார். பேருந்தில் ஏறிய போது அந்த இருக்கையில் வேறு ஒரு கல்லூரி மாணவி அமர்ந்திருந்தால் இந்துஜா ஆத்திரமடைந்தார்.
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி போனதில் ஆத்திரமடைந்த இந்துஜா பேருந்தை வழிமறித்து அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகளுக்கு அவதிக்குள்ளாகினர்.
பின்னர் அங்கு வந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் அந்தப் பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உரிய நேரத்திற்கு கிளம்ப வேண்டிய பேருந்துகள் அனைத்தும் தாமதமாக புறப்பட்டது.