வீடியோ எடுக்க சொன்ன வாலிபர்..! பள்ளத்தாக்கில் விழுந்து மாயம் …!

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை கொட்டித்தீர்த்து வருகிறது.இதன் காரணமாக கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அருவிகளில் நீர்வரத்து வேகமாக கொட்டித்தீர்த்து வருகிறது.

இதனிடையில் பரமக்குடியைச் சேர்ந்த அஜய் பாண்டியன் என்ற வாலிபன் தனது நண்பர்களுடன் கொடைக்கானல் பகுதியில் உள்ள புல்லாவெளி அருவிக்கு குளிக்கச் சென்றுள்ளனர்.

அப்போது அருவியின் பாறை இடக்குகளில் இறங்கி ஸ்டைலாக தன்னை வீடியோ எடுக்க நண்பர்களிடம் கூறியுள்ளார்.

பின்னர் நண்பர்கள் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தபோது ஆபத்தான இடுக்கில் நின்றுகொண்டிருந்த அஜய் பாண்டியன் திடீரென கால் இடறி கீழே விழுந்துள்ளார்.

சற்றும் எதிர்பார்க்காத நண்பர்கள் கத்தி கதறி கூச்சலிட்டனர்.தகவல் அறிந்து சம்ப இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் அருவியில் விழுந்த அஜய் பாண்டியனை நேற்று இரவு முதல் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அஜய் பாண்டியனை பற்றி விவரம் தெரியாததால் உறவினர்களும், நண்பர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.தற்போது இவர் இடரி விழுந்த காணொளி இணையத்தில் வெளியாகி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.