Connect with us

Raj News Tamil

வேலையின்மையால் இளைஞர்கள் மனஉளைச்சலில் உள்ளனர்: ராகுல்காந்தி!

இந்தியா

வேலையின்மையால் இளைஞர்கள் மனஉளைச்சலில் உள்ளனர்: ராகுல்காந்தி!

வேலையின்மையால் இளைஞர்கள் மனஉளைச்சலில் உள்ளனர் என்று நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

பொருளாதார மந்தநிலையின் தீய விளைவுகளை ஐஐடி போன்ற மிகவும் கவுரமான கல்வி நிறுவனங்களே சந்திக்க தொடங்கி உள்ளன. கடந்த 2022-ம் ஆண்டு, ஐஐடி வளாக ஆள்தேர்வில் 19 சதவீத மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. அடுத்த ஆண்டு, இந்த எண்ணிக்கை 38 சதவீதமாக, அதாவது இருமடங்காக உயர்ந்தது.

வேலையின்மையால் இளைஞர்கள் மனஉளைச்சலில் உள்ளனர். கல்விக்கு எதிரான பா.ஜனதாவின் மனப்பான்மையால் அவர்களின் எதிர்காலம் முடங்கி உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top