திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள வி.எஸ்.கே நகரை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் பார்கவி. 22 வயதாகும் இவர், அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவர் பின்தொடர்ந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் மாணவியை நிற்க சொன்ன அவர், தன்னிடம் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார்.
ஆனால், அதற்கு மாணவி ஒத்துக்கொள்ளாததால், பிளேடை வைத்து, அந்த இளைஞர் தாக்க முற்பட்டுள்ளார். அதற்குள் மாணவி கூச்சலிட்டதால், அவர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதனை அறிந்த மாணவியின் பெற்றோர், காவல்துறையில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அந்த இளைஞரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.