இன்ஸ்டா ரீல்ஸூக்காக தெருநாயை கொடுமைப்படுத்திய இளைஞர் கைது..!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் ஷகுர்பூர் பகுதியை சேர்ந்தவர் ஜாபர். இவர் இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட வேண்டும் என்பதற்காக தெருநாய் ஒன்றின் ஒரு காலை மட்டும் பிடித்துக்கொண்டு, அதனை தலைகீழாக சுற்றியுள்ளார். மேலும் அந்த நாயை அருகில் எரிந்து கொண்டிருந்த நெருப்பிற்கு கொண்டு சென்றுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, போஜ்பூர் காவல் நிலையத்தில் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

லைக்குக்காக இவர் செய்த காரியத்தால் கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

RELATED ARTICLES

Recent News