அரியலூர் அருகே இளைஞர் வெட்டி கொலைசெய்து விட்டு தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.அரியலூர் மாவட்டம் பொய்யூர் அருகே உள்ள சிப்காட் தொழிற்பேட்டை அருகே இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையெடுத்து அப்பகுதிக்கு சென்ற போலீசார், உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் உயிரிழந்தவர் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பதும், அவரது தலையின் பின்புறம் அரிவாள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அந்த இடத்தில் மதுபாட்டில்கள் போன்றவை இருந்தவை இருந்ததால் மது போதையில் கொலை சம்பவம் நிகழ்ந்திரக்ககூடும் என்று போலீசார் தெரிவித்தனர்.