புயல் காற்று காரணமாக அடுக்குமாடி கண்ணாடி உடைந்து விழுந்ததில் இளைஞர் பலி..!

காரைக்குடியை சேர்ந்த பழனியப்பன் (45) என்பவர் வீடுகளுக்கு சென்று கேஸ் சிலிண்டர் வழங்கும் பணியை செய்து வருகிறார். இவர் சிறு கூடல்பட்டி கிராமத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினராகவும் உள்ளார்.

இவர் இன்று காரைக்குடி பர்மா காலனி தந்தை பெரியார் நகர் ஒன்பதாவது வீதியில் உள்ள வீடுகளுக்கு கேஸ் சிலிண்டர் வழங்கும் பணி செய்துவிட்டு டூவீலரில் மெயின் ரோடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.

latest tamil news

அப்போது அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புயல் காற்று காரணமாக பக்கவாட்டு கண்ணாடி பெயர்ந்து பழனியப்பன் கழுத்தை நோக்கி பாய்ந்தது. இதில் கழுத்தில் படுகாயம் அடைந்து பழனியப்பன் ரத்த வெள்ளத்தில் மிதந்தார்.

உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காரைக்குடி வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.