உயிருடன் கிடந்த பாம்பு.. பச்சையாக கடித்து தின்ற இளைஞர்.. பரபரப்பு சம்பவம்..

உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானி அருகே உள்ள லால்குவான் பகுதியில், ரயில்வே ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. அந்த சமயத்தில் விஷப்பாம்பு ஒன்று அங்கு வந்துள்ளது. அப்போது, அங்கு இருந்த இளைஞர் ஒருவர், அந்த பாம்பை பிடித்து, உயிருடன் மென்று சாப்பிட்டுள்ளார்.

இதனை அங்கிருந்த பொதுமக்கள் வீடியோவாக எடுத்து, இணையத்தில் பதிவிட்டனர். பல்வேறு பார்வையாளர்களை இந்த வீடியோ பெற்ற பிறகு, வனத்துறை அதிகாரிகளின் கவனத்திற்கும், அது சென்றது. இதையடுத்து, வழக்கு பதிவு செய்த அதிகாரிகள், பாம்பை சாப்பிட்ட இளைஞர் கைது செய்தனர்.

இதையடுத்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த இளைஞரின் பெயர் கமலேஷ் என்பதும், போதையில் இருந்ததால், பாம்பை உயிருடன் பிடித்து சாப்பிட்டதும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் ஆச்சரியமான தகவல் என்னவென்றால், அது விஷப்பாம்பாக இருந்தபோதிலும், அந்த இளைஞருக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லையாம். இந்த சம்பவம், அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.