மனைவி மீது சந்தேகம்.. மகளை விஷம் வைத்துக் கொன்ற இளைஞர்..

மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூர் மாவட்டத்தில் உள்ள சாகாட் கிராமத்தை சேர்ந்த இளைஞர், மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார். மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்ட அந்த இளைஞர், இதுகுறித்து அடிக்கடி கேட்டு, தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பும், தம்பதியினருக்கு இடையே, தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், இளைஞரின் மனைவி, தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து, மனைவி வீட்டிற்கு சமாதானம் பேச அந்த நபர் சென்றுள்ளார். ஆனால், எவ்வளவு பேசியும் வீட்டிற்கு வர அவர் சம்மதிக்காததால், அந்த இளைஞர் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்.

இதனால், தற்கொலை செய்ய முடிவெடுத்த அவர், தன்னுடன் இருந்த தன் மகளுக்கு விஷத்தை கொடுத்துவிட்டு, தானும் அதனை அருந்தியுள்ளார். இதனை அறிந்த உறவினர்கள், அவர்கள் இரண்டு பேரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், சிகிச்சை பலன் இன்றி, அந்த சிறுமி உயிரிழந்தார். சிறுமியின் தந்தை, மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News