உத்தரப்பிரதேச மாநிலம் யாதகிரி பகுதியை சேர்ந்தவர் ரதோடு. இவர், பென்டெலா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். பென்டெலாவிற்கு ஆண் நண்பர்கள் அதிகம் என்று கூறப்படுகிறது. இவர், அந்த ஆண் நண்பர்களுடன் இணைந்து வீடியோ எடுத்து, அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ரதோடு, தனது காதலியை கண்டித்துள்ளார். ஆனால், அதற்கு ஒத்துக்கொள்ளாத பென்டெலா, “என் நண்பர்களுடன் வீடியோ எடுப்பது என்னுடைய உரிமை.. அதனை நீ தடுக்கக் கூடாது” என்று கூறியுள்ளார். இதனால், கோபம் அடைந்த ரதோடு, அதனை வெளிப்படுத்தாமல், அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளார்.
பின்னர், காதலியை சமாதானம் செய்து தன்னுடைய சொந்த ஊருக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு, இருவரும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு, மீண்டும் தனது காதலியை வீடியோ எடுக்கக் கூடாது என்று வற்புறுத்தியுள்ளார். ஆனால், அந்த சமயத்திலும் அவர் வீடியோ எடுப்பேன் என்று வாக்குவாதம் செய்துள்ளார்.
இதனால் உச்சகட்ட கோபத்தில் இருந்த ரதோடு, காதலியின் கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், இந்த குற்றத்தை மறைப்பதற்காக, காதலியின் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு, தற்கொலைக்கு முயன்றார். ஆனால், அவரை காப்பாற்றிய உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு, காவல்துறையினர் நடத்திய விசாரணையில், நடந்த அனைத்தையும் அவர் ஒப்புக்கொண்டார். சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட ஒரே காரணத்திற்காக, காதலியை இளைஞர் கொலை செய்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.