வேறு சாதி இளைஞர் உடன் காதல்.. வெட்டி கொலை செய்த தம்பி.. அக்கா பரிதாப பலி..

திருநெல்வேலி மாவட்டம் ராஜவல்லிபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்கத்தாய். 20 வயதான இவர், கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

அப்போது, தன்னுடன் பணியாற்றி வந்த இளைஞர் ஒருவரை, அவர் காதலித்து வந்துள்ளார். காதலன் மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், தங்கத்தாயின் குடும்பத்தினர், இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், தன்னுடைய காதலில், தங்கத்தாய் உறுதியாக இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு, தங்கத்தாயை, அவரது சொந்த தம்பி, அரிவாளை எடுத்து, சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

இந்த கொடூரத் தாக்குதலில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து, அந்த இடத்தில் இருந்து, தங்கத்தாயின் சகோதரர் தப்பியோடியுள்ளார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கொலையாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News