அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் ரூபன் ஒலால்டே. இவருக்கு, ஐடா கார்சியா என்ற மனைவியும், 3 மகன்களும் இருந்துள்ளனர். இந்நிலையில், காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு, செல்போனில் அழைப்பு விடுத்த ரூபன், தனது மகன், தங்களது ஒட்டுமொத்த குடும்பத்தையும், கொலை செய்ய முயற்சிப்பதாக கூறியுள்ளார்.
இதனைக் கேட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளனர். ஆனால், காவல்துறையினர் வருவதற்குள், ரூபனின் மகன், தனது தந்தை, தாய், இரண்டு சகோதரர்களை, துப்பாக்கியால் சுட்டு, கொடூரமாக கொலை செய்திருந்தார்.
இதையடுத்து, அந்த நபரை கைது செய்த காவல்துறையினர், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அதில், “என்னுடைய தாய், தந்தை, 2 சகோதரர்கள் என அனைவரும் நர மாமிசம் சாப்பிடும் பழக்கம் உடையவர்கள். அவர்கள் நான்கு பேரும், என்னையும் கொலை செய்து, சாப்பிட முயற்சி செய்தார்கள்.
இதனால் அச்சம் அடைந்த நான், அவர்களை துப்பாக்கியால், சுட்டுக் கொலை செய்தேன்” என்று பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால், இதனை ஏற்க மறுத்த காவல்துறையினர், அக்கம் பக்கத்தில் உள்ள குடும்பத்தினர் இடையே, விசாரணை நடத்தியுள்ளனர். அதில் தான் உண்மையான தகவல் என்னவென்று தெரியவந்துள்ளது.
அதாவது, தனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொலை செய்த, அந்த இளைஞருக்கு மனப் பிறழ்வு பிரச்சனை உள்ளதாம். இதனால் தான், தனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் அவர் சுட்டுக் கொன்றுள்ளாராம். மற்றப்படி, உயிரிழந்தவர்கள் நர மாமிசம் சாப்பிடும் மனிதர்கள் கிடையாதாம். இதுமட்டுமின்றி, அவர்கள் தங்களது அன்டை வீட்டாருடன், நல்ல உறவிலேயே இருந்து வந்துள்ளார்களாம்.