தங்கையுடன் தகாத உறவு என சந்தேகம். இளைஞரை கொன்ற அண்ணன்கள்.. பரபரப்பு..

உத்தரபிரதேச மாநிலம் கவுசாம்பி பகுதியை சேர்ந்தவர் திவாகர். இவர், தனது தாய் சங்கீதாவுடன், கஜூ என்ற கிராமத்தில் வசித்து வந்துள்ளார். இதே கிராமத்தில் வசித்து வந்த சாந்தி தேவி என்ற பெண், தனது மகளுடன் திவாகர் தொடர்பில் இருப்பதாக சந்தேகித்துள்ளார்.

இதையடுத்து, தனது 3 மகன்களுடன், திவாகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், 3 பேரும், திவாகரை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், தடுக்க வந்த சங்கீதாவையும், தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த இருவரும், பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், 3 பேரில் ஒருவரை கைது செய்துள்ளனர்.

மேலும், தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர். மகளுடன் இளைஞர் தகாத உறவு கொண்டிருப்பதாக சந்தேகித்த தாய், தனது மகன்களுடன் சென்று, இளைஞரை கொன்ற சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News