தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள மாரண்டஅள்ளி சி.எம்.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவர் இளம்பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். எனவே, அந்த பெண்ணுடன் தான் சேரவேண்டும் என்பதற்காக, தனக்கு தெரிந்த சசிகுமார் என்ற மந்திரவாதியை நாடி, வசியம் செய்ய சொல்லியுள்ளார்.
ஆனால், அந்த மந்திரவாதி, இளம்பெண்ணை மயக்கி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தினேஷ், தனது நண்பர்களுடன் சேர்ந்து, சசிகுமாரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். திட்டத்தின்படி, சசிகுமாரை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்த அவர், கல்லால் அடித்து கொலை செய்துள்ளார்.
இருப்பினும் ஆத்திரம் தீராமல், சசிகுமாரின் ஆணுறுப்பையும் வெட்டி வீசியுள்ளார். இதையடுத்து, தினேஷ்குமாரும், அவரது நண்பர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கொலையாளிகள் யார் என்று விசாரணை நடத்தி வந்தனர்.
காவல்துறையினர் தங்களை தேடுவதை அறிந்த அந்த இளைஞர்கள், நேரடியாக காவல்நிலையத்திற்கு வந்து, சரணடைந்தனர்.
இதையடுத்து, இரண்டு பேரையும் தர்மபுரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில தொடர்படைய சந்தீப் என்ற இளைஞரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.