மதன் ரவிச்சந்திரனின் ஸ்டிங் ஆபரேஷனில் சிக்கிய நெறியாளர்களில் ஐயப்பன் ராமசாமி மீது மட்டும் விமர்சனங்கள் அதிகமாக எழுந்து வருகிறது.
மதன் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள வீடியோவில் ஐயப்பன் ராமசாமி பேசியதாவது : ” எனக்கு ட்விட்டர் விட இன்ஸ்ட்டாகிராமில் தான் டீனேஜ் பெண்கள் பாலோவர்ஸ் அதிகமாக உள்ளனர். அதனால்தான் எனது இன்ஸ்டாகிராம் கணக்கை அட்மினிடம் கொடுக்காமல் நானே பார்த்து வருகிறேன். அட்மினிடம் கொடுத்துவிட்டால் அவனே மொத்தத்தையும் சாப்ட்ருவான்” என்று கூறியிருந்தார்.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ஐயப்பன் ராமசாமியை மீம்ஸ் போட்டு விமர்சித்தும் கண்டித்தும் வருகின்றனர். இந்நிலையில் பிரபல யூடியூபரான டிடிஎப் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கேவலம் பணத்துக்காக ஒருத்தரை பற்றி இழிவு படுத்தும் ஐயப்பன் ராமசாமிக்கு இனி மரியாதையே கிடையாது. ஐயப்பன் ராமசாமியோட இன்டர்வியூவில் போட்டிருந்த அதே சட்டையை போட்டுகொண்டு அவர் மீது வெறியோடு இருக்கிறேன்… கையில் சிக்கினா மூஞ்சி, மொகரைய உடைப்பேன் அவ்வளோ வெறியில இருக்கேன்” என அவர் பேசினார்.