மாட்டின் வாயில் கோழியை உயிருடன் திணித்த youtuber..!

சேலம் தாரமங்கலம் அருகே உள்ள பாப்பம்பாடி கிராமம் சின்னப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் youtuber ரகு, இவர் தனது நண்பர்களுடன் கடந்த டிசம்பர் மாதம் 22ஆம் தேதி ஒரு காளை மாட்டை பிடித்து அதன் வாயில் ஒரு கோழியை உயிருடன் திணிக்கும் காட்சியை படம் பிடித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்த வீடியோ கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில் சென்னை தி நகர் பகுதியில் சேர்ந்த விலங்குகள் நல வாரியத்தின் நிறுவனர் அருண் பிரசன்னா என்பவர் சேலம் தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார்.

அதன் பெயரில் காளை மாட்டை சித்திரவதை செய்ததாக ரகு மற்றும் அவருடைய நண்பர்கள் இரண்டு பேர் மீது போலீசார் விலங்குகள் வரை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News