தெலுங்கானா மாநிலம் சிர்சில்லா மாவட்டத்தில் உள்ள தங்களப்பள்ளியை சேர்ந்தவர் பிரணாய் குமார். இவர் யூடியூப் சேனல் ஒன்று வைத்துள்ளார். இவர், பாராம்பரிய உணவு வகைகளைச் சமைத்து அந்த வீடியோக்களை தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு வந்துள்ளார்.
இவர் சில தினங்களுக்கு முன் தேசியப் பறவையான மயிலை சமைத்து அந்த வீடியோவை பதிவிட்டார். மயிலை கொல்வது சட்டவிரோதம் என்பதால், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேசியப் பறவையான மயிலை கொன்றதால், பிரணாய் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன. தற்போது பிரணாய் குமாரை போலீசார் கைது செய்தனர்.