யுவன் செய்த காரியத்தால் வெங்கட் பிரபு வருத்தம்!

பல்வேறு திரைப்படங்களில் காமெடியான கதாபாத்திரங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் பிரேம்ஜி. இவர் நடிகராக இருந்தாலும், சில திரைப்படங்களில், இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், தனது சமூக வலைதளப் பக்கத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், யுவன் சங்கர் ராஜா தனக்கு ஐபோனை பரிசாக வழங்கியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான புகைப்படத்தையும், அவர் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில், பிரேம்ஜியும், யுவனும், சிரித்துக் கொண்டிருக்கும்போது, வெங்கட் பிரபு மட்டும் சோகமாக இருப்பதுபோல் உள்ளது. இந்த புகைப்படம், இணையத்தில் வைரலாகி வருகிறது.