ரியோ ராஜ் நடிப்பில், அறிமுக இயக்குநர் ஸ்வினீத் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஸ்வீட் ஹார்ட். பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தான், இந்த திரைப்படத்தை தயாரித்து, இசையமைத்துள்ளார்.
வரும் 14-ஆம் தேதி அன்று, இந்த திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், தற்போது இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட யுவன் சங்கர் ராஜா, “ஸ்வீட் ஹார்ட் திரைப்படம் பிரம்மாண்டமான முறையில் தயாராகி உள்ளது. இது இயக்குநரின் கனவு. இவரைப் போன்ற புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு” என்று கூறியுள்ளார்.