விஜய்யின் அரசியல் வருகை ஒரு நல்ல விஷயமாக இருக்கும் – யுவன் ஷங்கர் ராஜா கருத்து

கடந்த ஜூலை 15ஆம் தேதி மலேசியா கோலாலம்பூரில் ஹை ஆன் யுவன்’(High on U1) என்ற இசை நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சென்னை விமான நிலையம் வந்த யுவன் ஷங்கர் ராஜாவுக்கு அவரது ரசிகர்கள் மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது

மலேசியாவில் எதிர்பார்த்ததை விட அதிக அளவு வரவேற்பு கிடைத்ததாகவும். மக்களுக்குப் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் புதியதாக முயற்சி எடுத்து இந்த இசை நிகழ்ச்சி நடத்தியதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சி மக்களும் ஏற்றுக் கொண்டு சிறப்பான வரவேற்பை கொடுத்தனர் அதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். இந்நிகழ்ச்சியில் சிலம்பரசன் கலந்துகொண்டு பாடல்களை பாடி நடனமாடி நிகழ்ச்சியை சிறப்பாக்கினார்.

நடிகர் விஜய் அவர்கள் அரசியல் வருவதை குறித்து கேட்டபோது நல்ல ஒரு விஷயமாக இருக்கும் என்று நினைக்கின்றேன் என தெரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News