இந்திய இசை உலகில், மிகவும் பிரபலமான தபேலா கலைஞராக பயணித்து வந்தவர் சாகிர் உசேன். தபேலா இசை மேதையான உஸ்தாத் அல்லா ரக்கா கானின் மகனான இவர், இசைக்காக வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான கிராமி விருது உட்பட பல்வேறு விருதுகளை அவர் பெற்றிருக்கிறார்.
மகாராஷ்டிராவை சேர்ந்த சாகிர் உசேன், கடந்த 40 ஆண்டுகளாக, அமெரிக்காவில் வசித்து வந்தார். இந்நிலையில், இதயம் தொடர்பான பிரச்சனைக்காக, நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு, பல்வேறு பிரபலங்கள், தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.