கர்நாடகாவில் 5 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் : பீதியில் மக்கள்

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் 5 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் உறுதி செய்துள்ளார்.

கர்நாடகாவில் இதுவரை ஒரே ஒரு ஜிகா வைரஸ் பாதிப்பு மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. வேறெங்கும் இல்லை. எனவே பொதுமக்கள் யாரும் பயப்பட தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராய்ச்சூர் மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கேரளா, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்நிலையில் கர்நாடகாவில் முதல்முறை ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.