சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு மீது, அவரது மனைவி அடுக்கான குற்றச்சாட்டு..! நடந்தது என்ன..?

சென்னை புறநகர் பகுதியில் சோஹோ என்ற மென்பொருள் நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் உரிமயாளரான ஸ்ரீதர் வேம்பு, இந்நிறுவனத்தை மெட்ரோ நகரங்கள் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் சிறிய நகரங்களில் தொடங்கி உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பது போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தமிழ் நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த இவர், மனைவி பிரமிளா ஸ்ரீனிவாசனுடன் சான் பிரன்சிசுகோவில் வசித்து வந்தார். இதையடுத்து கடந்த 2020-ஆம் ஆண்டு தென்காசி மாவட்டம் மதளம்பாறை என்ற கிராமத்தில் குடியேறினார். இத்தகவல் பல்வேறு செய்திகளில் தலைப்பு செய்திகளாக வெளிவந்தன.

இந்த நிலையில் ஸ்ரீதர் வேம்புவின் மனைவி பிரமிளா ஸ்ரீனிவாசன் அவர் மீது, பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். இது குறித்து பிரபல அமெரிக்க நாளிதழான போர்ப்ஸ் செய்தி நிறுவனம் கூறியிருப்பதாவது, என் கணவருடன் நான் 29-ஆண்டுகளாக வசித்து வருகின்றேன் என்றும், எப்போது என்னையும் உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட என் மகனையும் கைவிட்டுவிட்டார் என்று கூறியுள்ளார். மேலும் எங்களுக்கு பொதுவாக இருந்த சில சொத்துக்கள் மற்றும் பங்குகளை அவரது குடும்பத்தினருக்கு மாற்றிவிட்டார் என வேதனையோடு தெரிவித்துள்ளார். இதனை என்னிடம் கேட்காமால் முறையின்றி பங்குகளை மாற்றியுள்ளார் என்றார்.

தற்போது இதற்கு பதிலளித்துள்ள ஸ்ரீதர் வேம்பு, நான் யாருக்கும் எந்த பங்குகளையும் மாற்றவில்லை என்றும் கிராமப்புற மேம்பாடு மற்றும் மறுமலர்ச்சிக்காக என்னை அர்பணிப்பதற்காவே இந்தியா சென்றேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் என் மனைவியை தமிழ்நாடு வரச்சொன்னேன், ஆனால் அவர் என் மகனுடன் அங்கேயே இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News