ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது: ராகுல் காந்தி!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில்,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த வழக்குரைஞர் ஆம்ஸ்ட்ராங் (54), கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு விரைந்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் என நம்புகிறேன். மேலும் தமிழக அரசை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்துவார்கள்.

ஆம்ஸ்ட்ராங்கை பிரிந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆதரவாளர்களும் எனது ஆழ்ந்த இரங்கல் என ராகுல் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News